'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவில் ஒரு இயக்குனரோ, நடிகரோ பெரிய வெற்றி ஒன்றைக் கொடுத்துவிட்டால் அவர்களை உடனடியாக தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.
இப்போது நடிகர்கள் கூட கிடைத்துவிடுகிறார்கள், ஆனால், ஹிட் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களைப் பிடிப்பது அரிதாகி வருகிறது. அந்த விதத்தில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை தற்போது பரபரப்பாகச் செய்து வருகிறார் லோகேஷ். இப்படத்தை முடித்ததும் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். அதற்குப் பிறகு தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்காக லோகேஷை இப்போதே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
அப்படத்தை 2023ம் ஆண்டில்தான் தயாரிக்கப் போவதாகத் தகவல். ஆனாலும், ஒரு பெரும் தொகையை அட்வான்ஸ் ஆகக் கொடுத்து விட்டார்களாம். அந்தத் தயாரிப்பு நிறுவனம் இது போல ஐந்தாறு இயக்குனர்களை ஒப்பந்தம் செய்துள்ளது கூடுதல் தகவல்.