ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

'நடுநிசி நாய்கள்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வின் ககுமனு. அதன்பிறகு மங்காத்தா, 7ம் அறிவு, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா, வேதாளம், ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு வெளியான 'திரி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியை ஒருதலையாக காதலிக்கும் சேத்தன் அமுதனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 'பீட்சா' 3ம் பாகத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். 'பீட்சா: தி மம்மி' என்ற பெயரில் இந்த படம் தயாராகி உள்ளது. திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரித்துள்ளார். அவரது உதவியாளர், மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். திகில் நிறைந்த திரில்லராக, தயாராகி உள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. அஸ்வினுடன் பவித்ரா மாரிமுத்து, காளி வெங்கட், குரேஷி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து அஸ்வின் கூறியதாவது: திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்டின் தரமான தயாரிப்புகளின் வரிசையில் 'பீட்சா 3: தி மம்மி' கட்டாயம் முக்கிய இடம் பிடிக்கும். இருக்கையை விட்டு துள்ளி எழ வைக்கும் திகில் காட்சிகளும் யூகிக்க முடியாத திடீர் திருப்பங்களுடன் நிறைந்த இப்படம் பார்வையாளர்களை இருக்கைகளின் நுனிக்கே கொண்டு வரும் என நம்புகிறேன். மறக்க முடியாத திரை அனுபவமாக இத்திரைப்படம் கட்டாயம் இருக்கும். முதல் இரண்டு பாகங்களை விட வித்தியாசமாக இருக்கும்.
படத்தில் நான் சமையற் கலைஞராக நடித்திருக்கிறேன். ஒரு ரெஸ்ட்டாரெண்ட் நடத்துகிறேன். அந்த ரெஸ்ட்டாரெண்டில் தினமும் ஒரு ஸ்வீட் வகையை அமானுஷ்ய சக்தி ஒன்று செய்து வைக்கிறது. அந்த ஸ்வீட்டை யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள் இறந்து போகிறார்கள். அந்த பழி என் மேல் விழும். இப்படி போகும் கதையில் யார் சுவீட் செய்து வைப்பது. கொலையாளி யார் என்பதை திரைக்கதை சொல்லும். என்கிறார் அஸ்வின்.




