வசந்தபாலன் இயக்கத்தில் ஆர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள படம் ‛அநீதி'. ஜூலை 21ல் படம் வெளியாக உள்ளது. எளிய மனிதர்களின் நீதி மறுக்கப்பட்ட குரலை அநீதி படம் பேசுகிறது. இப்படத்திற்காக படக்குழுவினர் புரொமோஷன் செய்து வருகின்றனர்.
நடிகை துஷாரா கூறுகையில், ‛‛எனது கேரியரில் முக்கியமான படமாக அநீதி இருக்கும். நான் இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கும், அர்ஜூன் தாஸ்க்கும் நடிப்பதில் உள்ள போட்டி நன்றாக இருக்கும். வசந்தபாலன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம்” என்கிறார்.
அர்ஜூன் தாஸ் கூறுகையில் “ரொம்ப பேருக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் நிறைய கற்றுக் கொண்டேன். வசந்தபாலன் அழைத்தபோது, வில்லன் ரோல் தான் தருவார் என நினைத்தேன். ஆனால் லீட் ரோல் பண்ண வேண்டுமென சொன்னதும், உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் எப்போதும் இயக்குநர்களிடம் சரணடைந்து விடுவேன். அவர்கள் சொல்லும்படி நான் நடிப்பேன். எனக்கு நீண்ட கால திட்டங்கள் இல்லை. லியோ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என பலரும் கேட்கிறார்கள். அது சர்ப்பரைசாக இருக்கட்டும். படம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது குரலால் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.” என்றார்.