வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' |

வெயில், அங்காடி தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் கடைசியாகப் வெளிவந்த ஜெயில் படம் வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் வழங்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற ஜூலை 21ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.




