இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் அரசியலுக்கு வரப் போகிறாரா இல்லையா என்பது குறித்து கடந்த வாரத்திலிருந்து அரசியல் வட்டாரங்களிலும், மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும், ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.
நாளை ஜுன் 22ம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அதில் 'நாளைய முதலமைச்சர்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அவர்களாகவே அப்படியான போஸ்டர்களை ஒட்டுகிறார்களா அல்லது விஜய் தரப்பிலிருந்து அப்படி போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்கிறார்களா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் விஜய் பேசிய பிறகு அவரது அரசியல் நுழைவு பற்றி கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படி ஒட்டும் போஸ்டர்கள் குறித்து ஆளும் கட்சி தரப்பிலிருந்து என்ன விமர்சனம் வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.