அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

பரத் நடித்திருக்கும் 50வது படம் 'லவ்'. இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார், மலையாள இயக்குனர் ஆர்.டி.பாலா இயக்கி உள்ளார். படம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வாணி போஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. அதற்குள் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் சமாச்சாரம் இருக்கிறது. நான் கணவனை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலான மனைவியாக நடித்திருக்கிறேன். பரத்துடன் இதற்கு முன் 'மிரள்' படத்தில் நடித்தேன். இது இரண்டாவது படம். அடுத்து ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறேன். நான் நடித்து முடித்துள்ள பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
என்னை போன்றே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அவர் உங்களுக்கு போட்டியா என்று பலரும் கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் நிறைய படங்களில் நடிக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கிறார். ஒரு தோழி என்கிற நிலையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாழ்த்து சொல்கிறேன். இதில் போட்டியோ பொறாமையோ எதுவும் இல்லை. அவர் வழியில் அவர் செல்கிறார். என் வழியில் நான் செல்கிறேன். இருவரை பற்றிய ஒப்பீடே தேவையில்லாத ஒன்று.
எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருப்பதே பெரிய சாதனைதான். தொடர்ந்து படங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பேன். இதுவரை கடந்து வந்த பாதையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிறைவாக இருக்கிறேன்.
இவ்வாறு வாணி போஜன் கூறினார்.