2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த படம் டிமான்டி காலனி. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த இந்த படம் வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் இந்த வருட செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.