2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கடந்த 2015ம் ஆண்டில் சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் வேதாளம். தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மெகர் ரமேஷ், ‛போலா சங்கர்'என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளார். சிரஞ்சீவி நாயகனாக நடிக்க, தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அந்த டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் இது வேதாளம் ரீமேக்கா என்று கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சிரஞ்சீவி தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்ததாக நேற்று போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். மேலும், முழுமையான படமாக பார்க்கும் போது திருப்தியாக உள்ளது. மாஸ் எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
டப்பிங் முடித்த கையோடு சிரஞ்சீவி அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வந்ததும் தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.