சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் மாவீரன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காதில் ஒலிக்கும் அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தை அணுகியுள்ளனர். அவர் மறுத்தபோது அதன்பின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அந்த குரல் கொடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால், அவரும் பிஸியாக நடித்து வரும் காரணத்தால் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் நடிகர் சிலம்பரசன் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என படக்குழுவினர்கள் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படம் 2 மணி நேர 26 நிமிடங்கள் நீளம் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.