‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு மற்றும் டெக்னீசியன்கள் ஆகியோரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம். இதற்காக எடையை குறைத்துள்ள சிம்பு மீண்டும் எடையை அதிகப்படுத்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.