ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் வெளியான படம் ‛ஆதி புருஷ்'. ராமாயணத்தை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள், கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் வசனங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுதொடர்பாக சில ஊர்களில் படக்குழுவினர் மீது புகார்கள் கூட அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங் பாலி(அனுமன்) எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது தேசத்துக்கும் பலம் தரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.