ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஹன்சிகா, ஆதி கூட்டணியில் விரைவில் பாட்னர் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து ஹன்சிகா கூறும்போது. நண்பர்களான யோகிபாபு மற்றும் ஆதி இருவரும் முதல் நாள் இரவு தூங்கி மறுநாள் எழுந்திருக்கும்போது யோகிபாபு ஒரு அழகிய பெண்ணாக மாறியிருப்பார்.. அந்த பெண் நான் தான். அதன்பிறகு பெண்ணாக இருந்தாலும் யோகிபாபுவின் நடை உடை பாவனைகளை பின்பற்றி படம் முழுவதும் அவரைப் போலவே நடித்துள்ளேன். இதற்கு முன்பு ஆண் வேடமிட்டு பல நடிகைகள் நடித்திருந்தாலும் ஒரு பெண் தோற்றத்தில் இருந்துகொண்டு ஆணின் உடல் மொழியை வெளிப்படுத்தி வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ஆதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரகத நாணயம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நாயகி நிக்கி கல்ராணி திடீரென இதுபோன்று நடிகர் முனீஸ்காந்தின் ஆவி புகுந்தது போல மாறி அவரைப் போலவே நடந்து கொள்வார். இந்த விஷயத்தை ஹன்சிகாவுக்கு ஆதி சொல்லவில்லையா ? இல்லை அவரும் மறந்து விட்டாரா?
அதேபோல மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதிகாசா என்கிற திரைப்படம் வெளியானது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அந்த படத்தின் நாயகன் நாயகியும் புராதான கால சம்பந்தப்பட்ட இரண்டு மோதிரங்களை ஒன்றாக அணியும்போது நாயகன் இங்கே நாயகியாகவும் அங்கே நாயகி நாயகன் போன்றும் உருமாறி இருப்பார்கள். இருவரும் கிட்டத்தட்ட படம் முழுவதும் தங்களது உடல்மொழியை மாற்றி நடித்திருப்பார்கள். அதனால் ஹன்சிகா நடித்திருக்கும் கதாபாத்திரம் சினிமாவுக்கு ஒன்று புதிதல்ல.