கங்கனா கன்னத்தில் ‛பளார்' விட்ட பெண் காவலர் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்! | நாற்பது வருடத்திற்கு பிறகு ரீ-யூனியன்! மகிழ்ச்சியில் அம்பிகா | அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் 20ல் மீண்டும் தொடங்குகிறது! | சல்மான்கான்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த கரீனா கபூர் - ராஷ்மிகா மந்தனா! | இசை வழியே என் தந்தையை கவுரவித்தது பெருமை: ஸ்ருதிஹாசன் | ரஜினி படத்தில் இணைந்த கமல் பட நடிகை! | சித்தார்த் நடிக்கும் காதல் கதை “மிஸ் யூ” | 'அரண்மனை 4' வெற்றியைப் பார்த்து 'காஞ்சனா 4'!! | ஹீரோயின் ஆனார் நக்ஷா சரண்: பைக் டாக்சி டிரைவராக நடிக்கிறார் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 30ம் தேதி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்தனர். இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர் . இதனை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.