டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛இந்தியன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள் கூட்டணியில் துவங்கியது. கொரோனா பிரச்னை, படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் இந்த படம் நின்றுபோனது.
கடந்தாண்டு நடந்த சுமூக பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் விறுவிறுப்பாக துவங்கியது. கமல் உடன் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்து சிலாகித்து போய் ஷங்கரை பாராட்டி உள்ளார் கமல்.
இதுதொடர்பாக ஷங்கருக்கு கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கிய கமல் அந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛ 'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.
அன்பன்
கமல்ஹாசன்''
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.