சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! | கேங்கர்ஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! |
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் ‛வினோதய சித்தம்'. தற்போது இந்த படத்தை தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து இன்று(ஜூன் 29) மாலை 5.04 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.