ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் ‛டிமான்டி காலனி'. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோப்ரா திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து அஜய் ஞானமுத்துவே இயக்குவதாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழுவினர் போட்டோ உடன் அறிவித்துள்ளனர்.
நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கிறார். தொடர்ந்து படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என அறிவித்துள்ளனர். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.




