மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி அமைச்சரான பின் வெளியாகும் இந்த படத்தை அவர் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன. குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பை காண இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் தேவர் மகன் படத்தை வைத்து இந்தப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்நிலையில் இந்தபடம் இன்று(ஜூன் 29) திரைக்கு வந்துள்ளது. படத்தை பார்த்த தனுஷ் நேற்று பாராட்டி இருந்தார். அதற்கு உதயநிதி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும், பிரியத்தையும் சமர்பிக்கிறோம்.'' என குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
கமல் வெளியிட்ட பதிவு : ‛‛மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ், ‛‛பெரும் பிரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக் கொண்ட கலைஞானி கமல்ஹாசன் சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.