'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தேதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தொடர் வாய்ப்புகளை பெற்று நடித்து வரும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, அந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்கிற பாடலுக்கு வித்தியாசம் நடனமாடி சிறு குழந்தைகள் வரை ரசிகைகளை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நேற்று முதல் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் ராஷ்மிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் தான் இணைந்து நடித்து வரும் அனிமல் என்கிற படத்தின் படப்பிடிப்பை ராஷ்மிகா நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.