ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சினிமா துறையில் உலகின் தலை சிறந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு படங்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த விருது இப்போது இந்திய படங்களுக்கும் மெல்ல சாத்தியமாகி வருகிறது. கடந்தாண்டு ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகஆஸ்கர் விருது பெற்றார் இசையமைப்பாளர் கீரவாணி. அதேப்போன்று ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அதேபோல் இந்த வருடத்திற்கு புதிய உறுப்பினர்களின் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 2023ம் ஆண்டிற்கான 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுடன் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர், சித்தார்த் ராய் கபூர், சந்திரபோஸ் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.