ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
அதிவரைவு பைக்குகளில் வேகமாக பயணித்து பலமுறை போலீஸ் வழக்குகளில் சிக்கியவர் டிடிஎப் வாசன். போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது நிறைய வழக்குகளும் உள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி இவரை ஒரு கூட்டம் கொண்டாடுகிறது. இந்நிலையில் இவர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ‛மஞ்சள் வீரன்' என பெயரிட்டு அவரது பிறந்தநாளான இன்று(ஜூன் 29) முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் கூட பைக்கில் சாகசம் செய்தபடி கையில் சூலத்துடன் ஆக்ரோஷமாக உள்ளார் வாசன். இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்குகிறார். தி பட்ஜெட் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு 299 கி.மீ வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.