ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
துணிவு படத்தை அடுத்து அஜித்தின் புதிய படம் உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அஜித்தின் படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ‛விடாமுயற்சி' என பெயரிட்டு கதை திரைக்கதை எழுதும் பணிகளில் தீவிரமடைந்தன.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் மீண்டும் த்ரிஷா இணைந்துள்ள நிலையில், அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக லைகா நிறுவன வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு நவம்பர் மாதத்துக்குள் தனக்கான காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்துவிட்டு இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்குவதற்கு அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே அஜித் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.