'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பழங்குடி இன மக்கள் கோலார் தங்க சுரங்க பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தில் நடித்து வந்த போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வந்தவர், தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதில் விக்ரமின் மூக்கில் காயம் மற்றும் முகமெல்லாம் சுருங்கிய நிலையில், தாடி, மீசை என வயதான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.