காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனர். இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழுக்கு மீண்டும் வந்து விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டதாக கூறப்படுகிறது. பூஜாவின் சமீபகால படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. மேலும் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும், கால்ஷீட் பிரச்னையாலும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.