பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் |
வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயா ரெட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படம் 'அண்டாவ காணோம்'. 2017ம் ஆண்டிலேயே இப்படத்தின் டிரைலர் வெளியானது. சில முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டாலும் வெளியாகாமல் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடித்துள்ள 'தண்டட்டி' படத்தின் கதையும், 'அண்டாவ காணோம்' படத்தின் கதையும் ஒன்றுதான் என 'அண்டாவ காணோம்' படத்தின் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் குற்றம் சாட்டி இருந்தார். அப்படியிருந்தால் 'தண்டட்டி' படத்தை வெளியிட தடை விதிக்கும்படியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
'தண்டட்டி' படம் அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 'அண்டாவ காணோம்' படத்தை நேற்றே பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். 'தண்டட்டி' படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக 'அண்டாவ காணோம்' படத்தைப் பார்த்தால்தான் இரண்டு கதையும் ஒன்றாக இருப்பது தெரிய வரும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. 'அண்டாவ காணோம்' படம் வெளிவர இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம், அதுவரை படத்தின் விமர்சனத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் நேற்று கேட்டுக் கொண்டார்கள்.
இந்த கதை சர்ச்சை குறித்து 'தண்டட்டி' தரப்பிலிருந்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.