எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'தமிழரசன்'. 2020ம் ஆண்டிலேயே இப்படம் வெளிவர வேண்டியது. கொரானோ தாக்கத்தால் தள்ளிப் போன படம் மூன்று வருடங்களுக்குப் பிறகே வெளியானது.
இப்படத்திற்கான எந்த ஒரு புரமோஷன் நிகழ்விலும் பட வெளியீட்டின் போது விஜய் ஆண்டனி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் அவரது இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பிச்சைக்காரன் 2' படத்திற்காக தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல புரமோஷன்களைச் செய்தார். தமிழில் சரியாக ஓடாத 'பிச்சைக்காரன் 2', தெலுங்கில் சில பல கோடிகள் லாபத்தைக் கொடுத்துள்ளது.
அதனால், தற்போது 'தமிழரசன்' படத்தை 'விக்ரம் ரதோட்' என்ற பெயரில் டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட உள்ளார்கள். படத்தின் முதல் பார்வை போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். படம் விரைவில் தெலுங்கில் வெளியாக உள்ளது.