Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தண்டட்டி'யில் நான் அப்பத்தா... : நடிகை ரோகிணி ஹேப்பி

25 ஜூன், 2023 - 01:39 IST
எழுத்தின் அளவு:
Actress-Rohini-exclusive-interview-about-Thandatti

தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... என்ன கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிச்சு ஒரு கலக்கு கலக்கு வாங்களே.... எங்கே போனாங்க என ரசிகர்கள் தேடும் நடிகைகளில் ஒருவரான நடிகை ரோகிணி, தான் நடிக்கும் 'தண்டட்டி' படம் குறித்து மனம் திறக்கிறார்...

'தண்டட்டி' படத்தில் நடித்ததில் கிடைத்த அனுபவம்?
தண்டட்டி அணிந்த அப்பத்தா கேரக்டரில் நடித்தது புது அனுபவம். இந்த படத்தில் கிராமத்து அப்பத்தாவின் அட்டகாசம், நக்கல், நையாண்டி, கோபம் எல்லாமே பார்க்க முடியும். அப்பத்தாவாகவும், பசுபதி உடன் நடித்ததில் சந்தோஷம்.

அப்பத்தா தோற்றம்?
இயக்குனர் மதுரை என்பதால் அந்த அப்பத்தாக்கள் கூடவே வாழ்ந்திருக்காரு. அவர் வாழ்வில் இருந்து பல விஷயங்களை எடுத்திருக்காரு. கருப்பாக, வயதான தோற்றம் என இது மாதிரி ஒரு வாழ்வியல் கதையில் இதுவரை நடித்ததில்லை. இயக்குனர், தயாரிப்பாளர் கார்த்தி என்னை நம்பி கேரக்டர் கொடுத்திருக்காங்க.

அப்பத்தாக்கள் கூட சூட்டிங் ஸ்பாட்ல எப்படி பழகுவீங்க?
அவங்க ரொம்ப அப்டேட்ல இருக்காங்க. பேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்காங்க. அவங்களோட இயக்குனர் ஒரு பக்கம் கத்திக்கிட்டு இருப்பாரு. ஆனால் இவங்களை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. டயலாக் பேச ஆரம்பிச்சா முடிக்கவே மாட்டாங்க. ஒரே சிரிப்பா இருக்கும்

பிணமாக நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது தானே?
பிணத்தை சுற்றி தான் முக்கிய கதையே நடக்கும் அங்கே நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் பிணம் தான் சாட்சியாக இருக்கும். இயக்குனர் காட்சி எடுத்த பிறகு கட் சொல்லவே மாட்டார். அப்படியே இருப்பது சிரமமாக இருந்தது

சமீப காலமா அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்களே?
நான் நடித்த விட்னஸ், பிகினிங் படம் எல்லாம் அம்மாக்கள் சுற்றிய கதை தான். இந்த கேரக்டரில் நடிக்கிறது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கு. அம்மா கேரக்டர் என்றாலும் படத்தில் நிஜமாக அம்மாவாக மாறி விடுவேன்.

படம் இயக்கம், தயாரிப்பு முயற்சிகள் எப்படி?
'அப்பாவின் மீசை' என்ற ஒரு படம் இயக்கினேன். இன்னும் ரிலீஸ் ஆகலை. அடுத்து ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். இதற்கிடையில் தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கிறேன். ஒரு பிலிம் மேக்கரா நல்ல கதையை கண்டிப்பா மக்களிடம் கொண்டு வருவேன்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர் ரகுவரன்...?
ஒரு படம் குறித்து ஒரு கேரக்டர் சொல்லிட்டால் அந்த நிமிஷமே அந்த கேரக்டருக்குள்ள தன்னை பொருத்தி கொள்வார். ரெண்டு பேரும் ஒரு மலையாள படத்தில் (கக்கா) நடிக்கும் போது எனக்கு 15 வயசு. அவருக்கு 24 வயசு. நல்ல நடிகர், அருமையான மனிதர்.

மகன் ரிஷி என்னவா வரணும்னு ரகுவரன் ஆசைபட்டார்?
'நீ நடிகனா வரணும்னு நினைத்தால் அமிதாப்பச்சன் மாதிரி வரணும்'என்பார் அவரை பொருத்தவரை ரிஷி என்ன பண்ணாலும் அது பெஸ்ட்டா பண்ணனும்னு ஆசைப்பட்டார். ஒரு சமயம் நீ பெரிய அறிவியல் விஞ்ஞானியாக வரணும் என்பார். இப்போ என் மகன் அறிவியல் ஆராய்ச்சி படிப்பு படிக்க போறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் அப்டேட்!கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் ... பிரபாஸ்-ன் ‛புராஜெக்ட் கே' படத்தில் கமல்ஹாசன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரபாஸ்-ன் ‛புராஜெக்ட் கே' படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in