காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி |

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை சிவராஜ் குமார் நிறைவு செய்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இம்மாதம் முடிவடையும் நிலையில் இன்னும் பர்ஸ்ட் லுக் வரவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 25) நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் விரைவில் என்று பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் இப்போது இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.




