Advertisement

சிறப்புச்செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்க: நடிகர் சதீஷ்

25 ஜூன், 2023 - 12:56 IST
எழுத்தின் அளவு:
actor-sathish-press-meet

நடிகர் சதீஷ் ‛வித்தைக்காரன்' படத்தில் நடிப்பதற்காக கோவை சென்றார். கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: படிக்கும்போது எந்த விதமான தவறான விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்; நாங்கள் படிக்கும்போது ஆசிரியருக்கு பயப்படுவோம், இப்போது உள்டாவாக மாறிவிட்டது. நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.

நாய்சேகர் படத்திற்கு பிறகு ‛சட்டம் என் கையில்' என்ற படத்தை முடித்துள்ளோம்; அது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது, நல்ல தொழிலாகவும் இருக்கிறது. தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும்.

திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் அதில் நான் எடுத்துக்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்!மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத்! கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் அப்டேட்! கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)