ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம். இந்தப் படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட 'தண்டட்டி' அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். மரணம் அடைந்துவிட்ட ஒரு கிராமத்து மூதாட்டியின் தண்டட்டியை யாரோ திருடி விடுகிறார்கள். அதை திருடியது யார்? எதற்காக என்பதுதான் படத்தின் கதை. கடந்த ஜூன் 23ல் திரையரங்குகளில் வெளியான படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.