நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இனியா என்ற தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் தற்போது ஆல்யாவுக்கு வில்லியாக காஜல் பசுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். கடைசியாக ராதிகா சரத்குமாரின் அரசி தொடரில் நடித்திருந்த காஜல் பசுபதி 14 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் வில்லியாக கம்பேக் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஜல் பசுபதி ஆல்யாவுக்கு எதிராக வில்லத்தனம் செய்யும் எபிசோடுகள் அண்மையில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. திறமையான நடிகையான காஜல் பசுபதிக்கு இந்த ரீ-என்ட்ரி தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளை பெற்றுத்தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.