ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பிரபல தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, சமீபகாலங்களில் மூட்டு வலியால் அவதிப்படுகிறார். இதனால் தான் தற்போது மேடை நிகழ்ச்சிகளிலோ, நீண்ட நேரம் நிற்பது போன்ற நிகழ்ச்சிகளிலோ அவர் பங்கேற்பதில்லை. இந்நிலையில், அவருக்கு என்னதான் ஆயிற்று என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப சமீபத்திய பேட்டி ஒன்றில், 'எனக்கு சிறிதான மூட்டு வலி பிரச்னை இருந்தது. அதற்காக செய்த ஆப்ரேஷன் தவறாக போய்விட்டது. இதனால் அதை சரி செய்ய மீண்டும் மீண்டும் என 3 சர்ஜரி செய்தார்கள். ஆனால், இதெல்லாம் செய்து முடிப்பதற்குள் மூட்டுவலி பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த வலி ஏன் வருகிறது எதனால் வருகிறது என்பது தெரியவேயில்லை. ஆனால், இந்த பிரச்னை என் வாழ்நாள் முழுவதும் வரும் பிரச்னையாகிவிட்டது. என்ன சிகிச்சை செய்தாலும் சரியே ஆகாது. இந்த பிரச்னையை நம் மனது ஏற்றுக்கொள்ளும் போது நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் தான் இப்போது அதிகமாக ஷோ செய்ய முடிவதில்லை' என்று கூறியுள்ளார்.