ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் |
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா அசோக் இணைந்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து ரித்திகா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், பாக்கியலெட்சுமி தொடரின் ஹீரோவான கோபி அதாவது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ரித்திகாவுடன் கற்பூரத்தை தொட்டு கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியது உண்மை தான் என்றும், அவருக்கு பேர்வெல் கொடுத்து தான் இந்த பதிவை சதீஷ் வெளியிட்டுள்ளார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் பேசி வருகின்றனர்.