தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிவிட்டார் நடிகர் சதீஷ். பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு பாக்கியலெட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்தது. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வரும் சதீஷ் அவ்வப்போது எதாவது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மீண்டும் நான் ரொம்ப நாட்கள் கோபி கேரக்டரில் தொடர்வேனா என்று தெரியாது. கஷ்டப்பட்டு நாலு காசு சம்பாரித்து வீட்டிற்கு கொண்டு வருவதற்குள் போதுமென்றாகி விடுகிறது. நாம் நடிக்கிறோம் என்பதை மறந்து நம்முடைய நிஜ கேரக்டரே இதுதான் என்று பலரும் அசிங்கமாக திட்டுகின்றனர். பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. என் ஜாதிக்காரர்கள் பலரும் இதை அனுபவிக்கின்றனர். நான் ஜாதிக்காரர்கள் என்று சொன்னது என்னை போன்ற நடிகர்களை தான். இப்போது புரிகிறதா? நான் ஏன் அடிக்கடி இண்ஸ்டாகிராமை டி-ஆக்டிவேட் செய்கிறேன் என்று?' என தன் வருத்தங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.