
ரித்திகா வெளியேறியது உண்மை தானா? - பாக்கியலெட்சுமி கோபி வெளியிட்ட அப்டேட்
ஆக 23, 2023
Advertisement
நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷிதா அசோக் இணைந்துள்ளதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து ரித்திகா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில், பாக்கியலெட்சுமி தொடரின் ஹீரோவான கோபி அதாவது நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ரித்திகாவுடன் கற்பூரத்தை தொட்டு கும்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, "எங்கிருந்தாலும் வாழ்க" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து ரித்திகா விலகியது உண்மை தான் என்றும், அவருக்கு பேர்வெல் கொடுத்து தான் இந்த பதிவை சதீஷ் வெளியிட்டுள்ளார் என்றும் சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!