ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கோயில் திருவிழாக்களில் வேஷம் கட்டி ஆடும் தெருக்கூத்து கலைஞரான தாமரைச் செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி புதியதொரு முகத்தை கொடுத்தது. பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிரடியாக அசத்திய தாமரைக்கு மக்களின் சப்போர்ட்டும் நிறையவே கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் குணச்சித்திர நடிகையாக சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது குடும்ப வறுமை காரணமாக தெருக்கூத்து கலைஞராக பல கஷ்டங்களை சந்தித்த தாமரை தற்போது கைநிறைய சம்பாதித்து தன் குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ஏ.மாத்தூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வு இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட தாமரை, வரவேற்பு பத்திரிகையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாமரையின் வளர்ச்சியை பாராட்டியும் அவர் மேன்மேலும் வளரவும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.