சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
நடிகை காஜல் பசுபதியை தெரியாதவர்களே இருக்க முடியாது. சொர்ணாக்கா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான காஜல் பசுபதி பெண் ரவுடி, தீவிரவாதி என பல மிரட்டலான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். தவிர சமூக வலைதளங்களிலும் பல பிரச்னைகள் குறித்து தைரியமாக தனது கருத்தினை பதிவிட்டு வருகிறார். இவரது நேர்மையான குணத்திற்காகவே பலரும் இவரது ரசிகர்களாக இருந்து வருகின்றனர். சாண்டி மாஸ்டருடனான முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின் இன்றளவும் சிங்கிளாக இருந்து வருகிறார் காஜல் பசுபதி. இவரை பலரும் மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் சிலர் நேரடியாகவே லவ் ப்ரொபோஸ் செய்தும் வந்தனர்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் தாலிக்கட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, 'ஒருவழியாக இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது. திடீரென முடிவு செய்ததால் யாருக்கும் சொல்ல முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அதேசமயம் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பதற்கு பழைய புகைப்படமாக இருப்பதால் நிச்சயமாக இது பொய் தான் காஜல் விளையாடுகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.