விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெகா ஆடிஷன் மூலம் இவர்களில் இருந்து 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் பாடல் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
https://twitter.com/thisisysr/status/1738175061100826691?t=hwRYzWS8dro8Tn1uhFtRRw&s=19
https://x.com/iam_SJSuryah/status/1738177694091620464?t=fLwIuKlGoRkvbsyxpbyc1g&s=08