ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். என்றாலும் ஒரு ஹீரோயினாக நிலையான ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தனது குத்துச் சண்டை பயிற்சியை மீண்டும் தொடங்கிய ரித்திகா கூடுதலாக கராத்தே பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது கராத்தே பயிற்சியில் முக்கியமான நிலையான பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அவருடன் அவரது தந்தையும் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.