சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
முன்பெல்லாம் வருடத்திற்கு 10 கல்லூரி படங்கள், இளம் வயது ஹீரோ படங்கள் வரும். ஆனால் தற்போது கல்லூரி படங்களே வருவதில்லை. காரணம் இளைய நடிகர்கள் அதிகம் இங்கு இல்லை. அப்படியே வந்தாலும் அவர்களால் சினிமாவில் தொடர்ந்து தாக்கு பிடிக்கவில்லை. இனி தனுஷ், சிம்பு ஆகியோரை கல்லூரி மாணவர்களாக காட்ட முடியாது.
விக்ரமின் மகன் துருவ்வை எதிர்பார்த்தார்கள். ஆதித்ய வர்மாவில் அறிமுகமாகி இந்த 4 ஆண்டுகளில் வெறும் 3 படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் தனி இசை ஆல்பங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார். இப்போது உள்ள ரேஸில் ஹரிஷ் கல்யாண், அர்ஜுன் தாஸ், அதர்வா, கவுதம் கார்த்திக் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகர்கள் மட்டுமே உள்ளனர்.
டாடா படம் தந்த வெற்றியால் ஓரளவுக்கு கவனிக்கப்படும் நடிகராகி உள்ளார் கவின். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு சில சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவர் பக்கம் செல்ல தயங்குகின்றனர். அவரை அடுத்து மணிகண்டன் கவனிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். இவர் வசனகர்த்தவாகவும் இருப்பதால் வரும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். ஜெய்பீம் தந்த அடையாளத்திற்கு பின் சமீபத்தில் வெளிவந்த குட் நைட் படமும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்துள்ளது. இருப்பினும் சம்பள விஷயத்தால் இவரை தயாரிப்பாளர்கள் அணுக தயங்குகின்றனர்.
உண்மையாகவே தற்போது தமிழ் சினிமாவில் இளம் ஹரோக்கள் பஞ்சம் உள்ளது . விஜய் டிவி புகழ் அஸ்வின், முகேன் போன்றவர்கள் இப்போது தான் வர துவங்கி உள்ளனர். வனிதாவின் மகன், இசை அமைப்பாளர் சிற்பி மகன், இயக்குனர் விக்ரமன் மகன் என்று இனி அடுத்தடுத்த தலைமுறை இளம் நடிகர்கள் சினிமாவில் முயற்சி வருவதால் வரும் காலங்களில் இளம் நடிகர்கள் படம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது.