பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” |
அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்த 'தண்டட்டி' படம் கடந்த மாதம் வெளிவந்தது. விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றாலும் இந்தப் படத்தைப் பார்க்க அதிக ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. படத்தின் வசூல் மிகக் குறைவாக இருந்ததாகவே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இப்படம் கடந்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியானது. யதார்த்தமான படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் வயதான பாட்டியாக 'தங்கப் பொண்ணு' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோகிணி அப்படி ஒரு பாராட்டைப் பகிர்ந்து, “'தண்டட்டி' படம் ஓடிடியில் வெளியானதும், அதிகமாக கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. நான் முன்பே சொன்னது போல தங்கப்பொண்ணு என் திரை வாழ்வில் முக்கியமான கதாபாத்திரம், நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாமல், பின் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெறும் படங்களின் வரிசையில் 'தண்டட்டி' படமும் சேர்ந்துள்ளது.