நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஷாலின் 34வது படமாக உருவாக உள்ள இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்துள்ளனர். தற்போது படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
விஷால், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இயக்க உள்ளார் ஹரி. படத்திற்காக வெளியான போஸ்டரிலேயே இயக்குனர் ஹரி தன்னுடைய டிரேட் மார்க்கானை அரிவாளையும் டிசைனில் வைத்துள்ளார்.
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய 'யானை' படம் கடந்தாண்டு வெளிவந்தது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 34வது படத்தை ஆரம்பித்துள்ளார். யானை படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து, தமிழகத்தின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு படமாக்கப்படவுள்ளது.