AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு மீண்டும் விஸ்வரூபமாகி வருகிறது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், சின்மயி போன்று வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும் என பாடகி புவனா சேஷன் கூறியுள்ளார்.
மீடூ விவகாரம் இந்தியாவில் எதிரொலிக்க துவங்கிய சமயத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இவரை போல் 17 பெண்களும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தினர். ஆனால் 5 ஆண்டுகள் ஆன பின்பும் கூட இந்த விவகாரத்தில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தார். அதில் உங்கள் நண்பரும், ஆதரவாளருமான வைரமுத்து மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தும் உங்கள் பாதுகாப்பில் அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடன் இருக்கிறார். உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு நெருக்கமாக உள்ள அவர் என்னையும் மற்ற பெண்களையும் அடக்க நினைக்கிறார். உங்கள் கண் எதிரே இது நடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். இதனால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மீண்டும் வெடிக்க துவங்கி உள்ளது.
இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாடகி புவனா சேஷன். ஏஎன்ஐ செய்திக்கு அளித்த பேட்டியில் புவனா கூறுகையில், ‛‛வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே தைரியமாக வெளியில் தங்களை பெயர் சொல்லி உள்ளனர். துன்புறுத்தல் சூழலில் இருந்து வெளியே வருவது கடினம் தான். இருந்தாலும் இளம் பாடகிகளின் கனவு நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதற்காகவே நான் பேசுகிறேன். சின்மயின் துணிச்சல் என்னை வியக்க வைக்கிறது. வைரமுத்து மீது அவர் குற்றச்சாட்டு வைத்ததால் சமூகவலைதளத்தில் அவரை பலரும் வசை பாடினர். இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள முடியாமல் தான் பல பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வைமுத்து மீது நிச்சயம் எந்த விசாரணையும் நடக்காது. நமது சிஸ்டம் அதை நடக்க விடாது. இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி போன்று தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும்'' என்கிறார்.