மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‛துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் நடிகைகள் ரித்துவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017ம் ஆண்டு துவங்கி பல்வேறு காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது .
சமீபகாலமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித் இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை பெற்று வருகின்ற ஜூலை 14 அன்று திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜூன் 17ல் மலேசியாவில் நடைபெறும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை கச்சேரியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.