இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 80வது பிறந்தநாளை இன்று(ஜூன் 2) கொண்டாடினார். அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சென்னையில் உள்ள அவரது ஸ்டுடியோவிற்கு சென்ற நடிகர் பிரபு, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா, நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, தயாரிப்பாளர் டி சிவா, பாடகி ஸ்வேதா மோகன், லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்ட பல கலைஞர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் தனது குடும்பத்தினர் உடன் பிறந்தநாள் கொண்டாடினார் இளையராஜா. தனது சகோதரரும், இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கார்த்திக் ராஜா, பவதாரணி, வாசுகி பாஸ்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். இதுதொடர்பான படங்களை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார்.