கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் |

நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஆதி புருஷ். இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் கிரீத்தி சனோன், சைப் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் 3டி தொழில்நுட்பத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகி உள்ளது. டி சிரியஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் தியேட்டரிக்கள் பிஸ்னஸ் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தின் தெலுங்கு பதிப்பு உரிமையை ஒரு நிறுவனம் சுமார் ரூ. 170 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இரண்டாவது படம் இதுவாகும். முதலிடத்தில் ஆர்ஆர்ஆர் படம் உள்ளது. ஆர்ஆர்ஆர் படம் தெலுங்கு சினிமாவில் சுமார் ரூ.190கோடிக்கு விலைபோனது. இதை ஆதி புருஷ் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




