லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் கதாநாயகியாக இடம் பிடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ராசியான கதாநாயகி என பெயரை பெற்று விட்டார் கல்யாணி பிரியதர்ஷன். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்கி வருகிறார்.
ஏற்கனவே கல்யாணி நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேசம் அப்துல் வஹாப் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக தட்டற தட்டற என்கிற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மலையாளத்தில் பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி உள்ளது.
அனிருத்தின் உற்சாக துள்ளலான குரலும் அதற்கு கல்யாணியின் அலட்டல் இல்லாத நடனமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. கால்பந்து போட்டியை மையப்படுத்தி அதன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் போட்டிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.