கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்வானந்த் திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருட பயணத்தை முடித்துள்ளார். ஷர்வானந்த்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் ஜங்ஷனில் ஷர்வானந்த் பயணித்த கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஷர்வானந்த் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், காருக்கு மட்டுமே சிறிய அளவிலான கீறல் ஏற்பட்டதாகவும் ஷர்வானந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.