சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. வடிவேலு, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், மும்பை போன்ற இடங்களில் நடைபெற்றது. கடந்தமாதம் நடிகை கங்கனா தன் சம்பந்தப்பட்ட படக்காட்சியை நிறைவு செய்தார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக நடிகை ராதிகா போட்டோ உடன் அறிவித்துள்ளார். மேலும் தனக்கு தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் என்றும், என்ன ஒரு மகிழ்ச்சி தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் பி வாசு உடன் பணிபுரிவது எவ்வளவு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.