லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகின்ற திரைப்படம் வீரன். வினய் ராய்,அதீரா ராஜ், முணிஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 2 வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படத்தின் ‛வீரன் திருவிழா' என்னும் அடுத்த பாடல் குறித்து அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ,இப்போது இந்த படத்தில் இருந்து மூன்றாம் பாடல் வீரன் திருவிழா நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.