நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' |
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்க கோருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதேபோல, கடந்த 2016ல் நாடு முழுவதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி நடித்து, இயக்கியுள்ள பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இதற்கிடையே வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் பிச்சைக்காரன் படத்தையும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி கூறுகையில், ‛இதை மக்களுடைய நல்லதுக்காகத்தான் செய்திருக்கிறார்கள். யாரெல்லாம் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இது பாதிப்பு. அதாவது பிகிலிகளுக்குத்தான் பாதிப்பு. ஆன்ட்டி பிகிலிகளுக்கு பாதிப்பில்லை. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்று பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என ஓராண்டுக்கு முன்பே நான் கூறினேன். அது இப்போது நடந்திருப்பது சந்தோஷம். ஒரு கிரியேட்டராக நான் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மக்களோடு இருந்துதான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படத்தை இயக்கியவனாக, பலமுறை எடிட் செய்தவனாக இந்த படத்தை பலமுறை பார்த்த பிறகும் எனக்கு கண்ணீர் வருகிறது. முதன்முறையாக மக்கள் பார்க்கும் பொழுது கண்ணீர் வராதா என்ன? நான் நினைத்தது நடந்துள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தால் கேவலமாக இருக்கும். ஏனென்றால், அந்த அம்மா செண்டிமெண்ட் மீண்டும் காட்டுவது போல இருக்கும். காதலியை திருமணம் செய்துவிட்டேன். இதெல்லாம் நடந்து விட்டது. இதனால் புதுக்கதையை எடுக்க முடிவெடுத்தேன்.
பிச்சைக்காரன்-3 திரைப்படம் 2025ம் ஆண்டு வெளியாகும். உடனடியாக அந்த திரைப்படத்தை எடுத்துவிட்டால் அதற்கான முழு எதிர்பார்ப்பு இருக்காது. பிச்சைக்காரன்-3 படத்துடைய கதை, முதல் பாகத்தின் தொடர்ச்சியோ, இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியோ அல்ல. அது ஒரு புதிய கதை. அந்த படத்தை நான் இயக்குவேனா என்பது இப்போது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.